பதிவு செய்த நாள்
26
நவ
2014
02:11
கண்களில் சிலர் தங்களது கணவரிடம் பாடும் ஒரே பல்லவி, உங்களைத் திருமணம் செய்து என்ன பலனைக் கண்டேன்? என்பது தான்.இவர்களைப் பற்றி நாயகம்(ஸல்) அவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா! எந்தப் பெண் தன்கணவனுக்கு நன்றிசொல்கிறாளோ, மறுமையில் அவளின்பால் இறைவன் தன் பார்வையை செலுத்த மாட்டான், என்று. திருமணமாகாதவரை, ஐயோ! இறைவா! நான் என்ன பாவம் செய்தேன்! எனக்கு ஒரு கணவரைத் தரமாட்டாயா? என்று கேட்கும் பெண்கள், திருமணத்துக்குப் பிறகு, கணவரிடம், உம்மைத் திருமணம் செய்து என்ன சுகத்தைக் கண்டேன்? என்று கேட்பது இறைவனைப் பொறுத்தவரை நன்றிகெட்ட செயலாக கருதப்படுகிறது.கணவரிடம் இன்ன பொருட்கள் வாங்கித் தாருங்கள் எனக் கேட்பதில் தப்பில்லை. அதை வாங்கித் தந்தே தீர வேண்டும் என அடம் பிடிப்பது தான் தவறு. கணவரை நல்ல முறையில் கவனிப்பது மனைவியின் கடமை.நாயகம் அவர்களின் துணைவியார் அன்னை ஆயிஷா, கணவரின் துணிகளைத் துவைப்பார். அவருக்கு எண்ணெய் தேய்த்து விடுவார். தலை வாரி விடுவார். நறுமணம் பூசுவார். இப்படி கணவருக்கு எளிய சேவைகள் செய்வது பெண்களின் கடமை.அது மட்டுமல்ல! கணவர் பணிக்குச் சென்று விட்டு திரும்புவதற்குள் வீட்டை ஒழுங்குபடுத்த வேண்டியதும் மனைவியின் கடமையே ஆகும்.துõய்மை, ஒழுங்கு, அழகு ஆகியவற்றுக்காக முழு முயற்சியையும் மேற்கொள்ளுங்கள். ஒவ்வொரு பொருளையும் ஒழுங்காக அதற் குரிய இடங்களில் வையுங்கள். ஒழுங்காக அவற்றைப் பயன்படுத்துங்கள். மனைவியின் கடமை எந்தளவு முக்கியமோ, அதே போல கணவன் தனக்குரிய கடமையையும் சரி வர செய்ய வேண்டும். குறிப்பாக, மனைவியைக் குறை சொல்லிக் கொண்டே இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், உங்கள் மனைவியைப் பற்றி முடிந்தளவுக்கு நல்ல எண்ணமே வைத்திருங்கள். அவளுடன் சேர்ந்து வாழவே எண்ணுங்கள். ஒருவேளை அவள் உங்களிடம் சரிவர நடந்து கொள்ளாவிட்டாலும் சகிப்புத்தன்மை மிகவும் அவசியம். அவளது குறைகளைப் பெரிதுபடுத்தாதீர்கள். அவளது முகம், உடலமைப்பு, பழக்க வழக்கங்கள், வீட்டைப் பேணும் முறை ஆகியவற்றில் குறை இருந்தாலும், அதை பெரிதுபடுத்தாதீர்கள். அர்ப்பணிப்புடனும், விவேகத்துடனும் செயல்படுங்கள், என்கிறார்கள். எந்நிலையிலும் சமாதானம் செய்து கொள்வதே நலம் தரக்கூடியதாகும் என்றுஇறைவன் அறிவுறுத்துகிறான், என்றும், ஒரு விஷயம் உங்களுக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால், அல்லாஹ் அதில் பல நன்மைகள் வைத்திருக்கக் கூடும், என்றும் குர்ஆனில் சொல்லப்பட்டு உள்ளது. எனவே கணவன், மனைவி கருத்தொருமித்து வாழவே முயற்சிக்க வேண்டும்.