திருவண்ணாமலை கோயிலின் பிரம்ம தீர்த்தக்கரையில் கால பைரவர் சந்நிதி இருக்கிறது. இவரது சிலையை திருவாசியுடன் ஒரே கல்லில் வடித்திருக்கின்றனர். எட்டு கைகளில் ஆயுதங்கள் எந்தி, கபால மாலையுடன் காட்சி தருகிறார். தலையில் பிறைச்சந்திரன் இருக்கிறது. திருஷ்டி, பயம் நீங்க இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள். @த#பிறை அஷ்டமி நாளிலும் ஞாயிறு ராகு காலத்திலும் இவரை வழிபடுவது சிறப்பு.