சங்கராந்தி என்றால் ‘நகர்வது’. சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு நுழையும் நாளே மகர சங்கராந்தி. சூரியன் வடக்கு திசை நோக்கி பயணிக்கும் முதல் நாள் இது. தமிழ் மாதங்களில் பத்தாவது மாதம் மகர மாதம். மகரசங்கராந்தி விழாவில் ஐயப்பன் கோயிலில் கொண்டாடப்படுவது மகர விளக்கு பூஜை. லட்சக்கணக்கான பக்தர்கள் இதில் பங்கேற்பர். ஆண்டுதோறும் ஜன.14ல் மகரவிளக்கு தரிசனம் நடக்கும். அப்போது ஐயப்பனை ஜோதி வடிவில் தரிசிப்பர். இதனால் மனம், உடல், ஆன்மாவிற்கு புத்துணர்வு உண்டாகும்.