இஸ்லாமின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகத் திகழ்வது ஹஜ் பயணம். ஒரு முஸ்லிம் தன் வாழ்நாளில் ஒரு முறையாவது, மெக்காவுக்கு புனிதப்பயணம் சென்று வந்துவிட்டால், அளப்பரிய நன்மைகளைப் பெறலாம். ஒருவேளை, அங்கு சென்று வருமளவுக்கு அல்லாஹ் செல்வச்செழிப்பைத் தரவில்லை என்றால், ஹஜ் பயணத்தின் நன்மையை அடைய வழி என்ன?இந்தக் கேள்வியை நாயகம் (ஸல்) அவர்களின் தோழர் ஒருவர் கேட்டார். தோழரே! அதிகாலை வேளையில், மக்கள் எல்லாம் எழுவதற்கு முன், ஸுப்ஹு (அதிகாலை) தொழுகையை முடித்து விட்டு, உங்கள் தாயாரைக் கனிவோடு சென்று பாருங்கள். அங்கீகரிக்கப் பட்ட ஹஜ்ஜின் நன்மை கிடைக்கும், என்று பதிலளித்தார்கள் நாயகம்.