பழநி: பழநி மலைக்கோயில் உண்டியலில் பக்தர் ஒருவர் நூறுபவுன் எடையுள்ள தங்கவேலை காணிக்கையாக செலுத்தியுள்ளார். 22 நாட்களில் ரூ.1.48 கோடி வசூலாகியுள்ளது.
பழநி மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இதில் ரொக்கமாக ஒருகோடியே 48 லட்சத்து 57 ஆயிரத்தி 525 ரூபாயும், தங்கம் ஆயிரத்து 546 கிராமும், வெள்ளி 15 ஆயிரத்து 600 கிராமும், வெளிநாட்டு கரன்சிகள் 699 ம் கிடைத்தது. பக்தர் ஒருவர் செலுத்திய 5 அடி உயரமுள்ள 100 பவுன் எடையுள்ள தங்கவேல் மற்றும் தங்கம், வெள்ளிப் பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இணை ஆணையர்(பொ) ராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா, திண்டுக்கல் உதவி ஆணையர் ரமேஷ் பங்கேற்றனர்.