அழகர்கோவில்: அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயிலில் கார்த்திகையை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. சுவாமி தங்கக்கவசத்தில் அருள்பாலித்தார். மாலை 5 மணிக்கு சப்பரத்தில் எழுந்தருளிய முருகப் பெருமான் கோயிலை வலம் வந்தார். இரவு சொக்கப்பனையும், கோயிலில் கார்த்திகை மகா தீபமும் ஏற்றப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை துணை கமிஷனர் வரதராஜன் தலைமையில் பேஸ்கார் தேவராஜ் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.