சோழவந்தான்:சோழவந்தான் ஐயப்பன் கோயிலில் கார்த்திகைமாத உற்சவ சிறப்பு பூஜை, அன்னதானம் நடந்தது. சங்கங்கோட்டை பக்தர்கள் சார்பில் பல்வேறு அபிஷேக, தீபாராதனை நடந்தது. சுவாமி ராஜஅலங்காரத்தில் அருள்பாலித்தார்.பயிற்சி வகுப்புசெக்கானூரணி:தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்பு செக்கானூரணி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. உசிலம்பட்டி செயற்பொறியாளர் சண்முகம் தலைமை வகித்தார். உதவி செயற்பொறியாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். செக்கானூரணி உதவி பொறியாளர் ஸ்ரீதர் வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர் பிரபு உட்பட பலர் பேசினர். பசுமலை உதவி மின்பொறியாளர் ராகவன் நன்றி கூறினார்.