பதிவு செய்த நாள்
08
டிச
2014
12:12
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் உள்ள வேட்டை வல மாரியம்மன் கோவிலில் வரும் 10ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. அதையொட்டி நேற்று அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை, வாஸ்துசாந்தி, ரக்ஷா ஹோமம், பிரவேச பலி, தன பூஜை மற்றும் பூர்வாங்க பூஜைகள், புதிய விநாயகர் சிலை கரிகோலம் வருதல், அஷ்டாதச கிரியை பூஜை நடந்தது. இன்று 8ம் தேதி அஸ்த்ர ஹோமம், வேட்டை வல மாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனை, அக்னி சங்க்ரணம், தீர்த்த சங்ரணம், யாக அலங்காரம், ய õகசாலை ஸ்தாபனம், மிருத்சங்ரணம், அங்குரார்பணம், ரக்சபந்தனம், கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், யாகசாலை பிரவேசம், முதல்கால யாகபூ ஜை ஆரம்பம், மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை நடக்கிறது. நாளை 9ம் தேதி விசேஷ சந்தி, இரண்டாம்கால பூஜை, யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல், மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை, விசேஷ சந்தி, மூன்றாம் கால யாக பூஜை, கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை, சர்ப்ப பூஜை, வேட்டை வல மாரியம்மனுக்கு ரஜத பந்தனம் சாத்துதல், மகா பூர்ணாஹூதி, வேத உபசாரம், திராவிட உபசாரம், ராக உபசாரம் தாள உபசாரம், பம்பை உடுக்கை உபசாரம், தீபாராதனை நடக்கிறது. கும்பாபிஷேகத்தினமான 10ம் தேதி நான்காம் கால யாக பூஜை , பிம்பசுத்தி ரக்ஷா பந்தனம், தத்வார்ச்சனை, ஸ்பருஷாஹதி, திரவ்யா ஹூதி, மஹா பூர்ணாஹூதி தீபாராதனை, யாத்ராதானம், கலசம் புறப்பாடு காலை 7:10 மணிக்கு கும்பாபி ஷேகம் நடக்கிறது.