ஐயப்ப சேவா சமாஜம் சார்பில் சிதம்பரத்தில் லட்சார்ச்சனை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08டிச 2014 12:12
சிதம்பரம்: சிதம்பரத்தில், ஐயப்ப யாத்திரிகர்களின் குடும்ப சங்க பெருவிழாவை முன்னிட்டு லட்சார்ச்சனை நடந்தது. சிதம்பரம், கீழ வீதி கோதண்டராமர் திருமண மண்டபத்தில் நடந்த விழாவிற்கு சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் அகில இந்திய பொதுச்செயலாளர் ஈரோடு ராஜன் கொடி ஏற்றி வைத்து சிறப்பு பூஜைகள் செய்தார். தொடர்ந்து ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், சரணம் வழிப்பாடு மற்றும் லட்சார்ச்சனை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 18 ஆண்டுகள் சபரி மலை யாத்திரை சென்ற மூத்த ஐயப்ப பக்தர்கள் கவுரவிக்கப்பட்டு சேவா சமாஜம் சார்பில் சான்றிதழை சிதம்பரம் மவுனமடம் ஆதீனம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் வழங்கினார்.இதில் ஐயப்ப சேவா சமாஜ மாநில துணை தலைவர் நடராஜபிரபு, அமைப்பு செயலர் சிவராமன், மாவட்ட நிர்வாகிகள் தட்சிணாமூர்த்தி, சத்தியமூர்த்தி, மோகன், அப்பாவு, கனகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.