Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெற்றோருக்காக பிள்ளைகளா ... ஆபத்து காலத்திலும் துணிவுடன் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தங்க மழை பொழிகிறது!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2014
05:12

1942ல், காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் திருப்பணி தொடங்கி, 1944 பிப்.7ல் கும்பாபிஷேகம் நடத்த காஞ்சிப்பெரியவர் தீர்மானித்திருந்தார். இதற்கிடையில், ஜன.31ல் பெரியவர் கோயிலுக்கு வந்தார். அம்பாள் கர்ப்பகிரகத்தின் மீதுள்ளவிமானத்தின் செப்புக் கவசத்தைக் கழற்றிக் கொண்டு வரும்படி கட்டளையிட்டார். பணியாளர்கள் அதைக் கொண்டு வந்ததும், பெரியவர் உன்னிப்பாக பார்த்துவிட்டு, அதன் மீது தங்கமுலாம் பூச வேண்டும் என அபிப்ராயப்பட்டார். அதை பார்த்த தங்க வியாபாரிகள், அதற்கு முலாம் பூச குறைந்தது 100 பவுன் தங்கமாவது தேவைப்படும் என தெரிவித்தனர்.அப்போது, ஸ்ரீமடத்தின் மேனேஜர் தங்க முலாம் பூசுவதற்குத் தேவையான பணம் கைவசம் இல்லை என்பதைப் பணிவுடன் பெரியவரிடம் தெரிவித்தார். கோயிலில் கூடியிருந்த பக்தர்கள் நடப்பதைக் கவனித்துக் கொண்டிருந்தனர். இந்த நேரத்தில், மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர் அம்பாளைத் தரிசிக்க கோயிலுக்கு வந்திருந்தார். சங்கீத மும்மூர்த்திகளின் பாடல்களை பாடுவதில் சமர்த்தரான அவர், பெரியவரை நமஸ்காரம் செய்ய வந்தார். அவரிடம் பெரியவர், நல்ல சமயத்தில இங்கு வந்தே. இங்கே உட்காந்து அம்பாள் மீது கீர்த்தனைகளைப் பாடேன் என்றார். அவரும் 20 நிமிஷம் பக்தியோடு பாடல்களைப் பாடினார். அதன்பின், பக்கத்தில் நின்ற சீடனான சிறுவனை அழைத்து, ஆதிசங்கரருக்காக திருமகள் தங்கமழை பெய்வித்த கனகதாராஸ்தவம் ஸ்தோத்திரத்தைப் பாட உத்தரவிட்டார். அவர் பாடத் தொடங்கியதும், அங்கு கூடியிருந்த பெண்களில் சிலர், தங்கள் தங்க நகைகளை கழற்றி பெரியவர் முன் இருந்த தட்டில் சமர்ப்பித்தனர். அம்பாளின் கர்ப்பகிரக விமானத்திற்கு தங்க முலாம் பூச இதனை ஏற்றுக் கொண்டு தங்களுக்கு ஆசிர்வாதம் அளிக்கும்படி வேண்டினர்.விஸ்வநாத அய்யர், பெரியவரிடம் விடை பெற்றுக்கொண்டு கிளம்பத் தயாரானார். அவரிடம் பெரியவர், நீ இங்க வந்தப்போ குழப்பமா இருந்தது. நீ அம்பாளைப் பற்றி பாடி முடித்ததும், தைரியம் உண்டானது. இந்த பையன்கனகதாரா ஸ்தவம் பாடும் போது பொன்மழையே பொழிந்தது, என்று சொல்லி அங்கிருந்த அனைவருக்கும் ஆசியளித்து மகிழ்ந்தார்.நம் சுயநலத்துக்காக கனகதாரா ஸ்தவம் பாடுவதை விட, பொதுநலனுக்காக பாடினால், இந்த நாடே தங்கமழை பொழியும் பூமியாகும். பெரியவர் நம் முன் நிகழ்த்திய அற்புதநிகழ்வு உணர்த்தும் கருத்து இதுவே! (மகான் காஞ்சிப் பெரியவர்)

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar