பதிவு செய்த நாள்
09
டிச
2014
11:12
பெங்களூரு: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி தைப்பூச இருமுடி பெருவிழா, நாளை முதல், பிப்., 2ம் தேதி வரை நடைபெறுகிறது. சக்தி மாலை அணிந்து, இருமுடி ஏந்தி, மேல்மருவத்தூர் சுயம்பு அன்னை ஆதிபராசக்தி அருளும் சித்தர் பீடத்துக்கு, வரும் பக்தர்களின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மாலை அணிய விரும்பும் பக்தர்கள், முறையாக, சக்தி மாலையை, அருகிலுள்ள, மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் அணிந்து, இருமுடி ஏந்தி, மேல்மருவத்தூர் சென்று, குருநாதரின் நல்லாசியையும், ஆதிபராசக்தியின் திருவருளையும் பெறுமாறு, மன்றத்தார் அழைப்பு விடுத்துள்ளனர். விவரங்களுக்கு, கீழ்கண்ட மையங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர். பெங்களூரு: 080 3240 2519, 2671 0402, மைசூரு: 94484 34463, ஷிமோகா: 94482 18652, கே.ஜி.எப்.,: 94483 21559 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். கர்நாடகாவிலிருந்து, மேல்மருவத்தூர் செல்வதற்கு, சக்தி தொண்டர்கள் தயாராகி வருகின்றனர். இதற்காக, தனி பஸ்கள், ’புக்கிங்’ செய்யப்பட்டு உள்ளன.