உளுந்தூர்பேட்டை: செங்குறிச்சி திரவுபதியம்மன் கோவிலில் சாரதா ஆசிரமம் சார்பில் உலக நன்மை, மழை வேண்டியும் சுமங்கலி மற்றும் விளக்கு பூஜை நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா செங்குறிச்சி திரவுபதியம்மன் கோவிலில் சாரதா ஆசிரமம் சார்பில் உலக நன்மை, மழை வேண்டியும் சுமங்கலி பூஜை மற்றும் விளக்கு பூஜை நடந்தது. சாரதா ஆசிரம சகோதரி சத்ய பிராண மாஜி தலைமை தாங்கினார். நுõற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினர் சுவாமியை தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கினர்.