பெரம்பலுõர்: பெரம்பலுõர் அருள்மிகு ஐயப்பசாமி திருக்கோயிலில் மழை வேண்டி, உலக நன்மைக்காக 108குத்துவிளக்கு பூஜை நடந்தது. பெரம்பலுõர் பழைய நகராட்சிஅலுவலகத்துக்கு அருகில் உள்ள அருள்மிகு ஐயப்ப சாமி திருக்கோயிலில் ஸ்ரீ ஐயப்ப சேவாசங்கத்தின் சார்பாக நேற்றுமுன்தினம் இரவு உலக நன்மைக்காகவும், மழைபெய்ய வேண்டியும் 108 குத்துவிளக்கு பூஜை நடத் தப்பட்டது. இதனையொட்டி குருசாமி நாராயணசாமியால் சிறப்பு அலங்காரத்துடன் அபிஷேகம் நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குருசாமிகள் ராஜேந்திரன், ராஜேந்திரன் மற்றும் ஸ்ரீஐயப்ப சேவா சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர். இதில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.