விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த அரசமங்கலம் பெருமாள் கோவிலில் பாலாலய சிறப்பு ஹோமம் நடந்தது. விழுப்புரம் அடுத்த அரசமங்கலம் கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி, சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், பிப்., 2ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி கோவில் வளாகத்தில் நேற்று காலை 9:30 மணியளவில் விமான பாலாலயம் நடந்தது. கும்பகோணம் <உப்பிலியப்பன் கோவில் அர்ச்சகர்கள் சம்பத்குமார் பட்டாச்சார், ஸ்ரீராம் பட்டாச்சார் ஆகியோர் பாலாலய பூஜைகள் மற்றும் சிறப்பு ஹோமத்தை நடத்தி வைத்தனர். முன்னதாக கோவில் அர்ச்சகர் வெங்கடேஷ்பாபு பட்டாச்சார் முன்னிலையில் சிறப்பு ஹோமம் துவங்கியது. நிகழ்ச்சியில் கிருஷ்ணமூர்த்தி பட்டாச்சார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.