பதிவு செய்த நாள்
11
டிச
2014
12:12
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கடந்த, 20 நாட்களில், உண்டியலில், 58.03 லட்சம் ரூபாயும், 608 கிராம் தங்கமும் காணிக்கை யாக செலு த்தப்பட்டு உள்ளது. திருத்தணி முருகன் கோவிலில், கடந்த, 5ம் தேதி, கார்த்திகை திருவிழா நடந்தது. அதில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, மூலவரை தரிசித்தனர். மேலும், தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்து, முருகப்பெருமானை வழிபட்டு, தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, உண்டியலில், பணம், தங்கம், வெள்ளி மற்றும் வெளிநாட்டு நாணயங்களை செலுத்தினர். கடந்த மாதம், 18ம் தேதியில் இருந்து, கடந்த, 8ம் தேதி வரை, பக்தர்கள் அளித்த காணிக்கை உண்டியல்கள் நேற்று அறநிலைய துறை அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப் பட்டன. பின், 200க்கும் மேற்பட்ட கோவில் ஊழியர்கள், பணம், தங்கம், வெள்ளி என, தனித்தனியாக பிரித்து எண்ணினர். அதில், 58,03,896 ரூபாயும், 608 கிராம் தங்கமும், 5,089 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்துள்ளன.