மாவிலாதோப்பு பத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11டிச 2014 02:12
கீழக்கரை: கீழக்கரை அருகே உள்ள மாவிலாதோப்பு கிராமத்தில் உள்ள பத்திரகாளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த திங்கள்கிழமை அன்று அனுக்ஞை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கி வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம், முதலியவைகளுடன் முதல்காலயாக சாலை பூஜை நடந்தது. நேற்று காலை 9:30 மணிக்கு மேல் வேதமந்திரங்கள் முழங்க திண்டுக்கல் சவுந்திரராஜன் பட்டர் தலைமையில் கும்பத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. பின்னர் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டு பத்திரகாளியம்மன் சந்தன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை மாவிலாதோப்பு நாடார் உறவின்முறை சங்க நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.