பதிவு செய்த நாள்
12
டிச
2014
11:12
திருவள்ளூர்: திருவள்ளூர் அய்யப்பா திருப்பணி சேவா சங்கம் சார்பில், தீர்த்தீஸ்வரர் கோவிலில், 44வது ஆண்டாக, அய்யப்பன் திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம், மாலை 5:00 மணிக்கு, 18 விளக்கு ஏற்றி வைத்து, விசேஷ அலங்காரத்துடன் அன்னாபிஷேகம் நடந்தது. நேற்று, காலை 9:00 மணிக்கு, கணபதி பூஜையும், தொடர்ந்து, அய்யப்ப சுவாமி படம் செட்டித்தெரு காளிகாம்பாள் கோவிலிருந்து, பஞ்ச வாத்தியத்துடன் எழுந்தருளுதல் நிகழ்ச்சியும் நடந்தது. பிற்பகல் 12:00 மணிக்கு, உச்சிக்கால பூஜையும், சமபந்தி போஜனமும் நடந்தன. மாலை 6:00 மணிக்கு வாண வேடிக்கை, பஞ்ச வாத்தியம், பஞ்ச பூத வாத்தியத்துடனும் விசேஷ அலங்காரத்துடனும் அய்யப்ப சுவாமி வீதி உலா நடந்தது. இரவு, மகா தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.