திருப்பூர் : சபரிமலையில் சேவை செய்வதற்காக, அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில்,திருப்பூரில் இருந்து 82 மாணவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். திருப்பூர் அகில பாரத ஐய்யப்பா சேவா சங்கம், சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இச்சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட பின், முதன்முதலாக, திருப்பூரில் இருந்து 82 கல்லூரி மாணவர்கள், சபரிமலை சன்னிதானம் பகுதியில் சேவை செய்ய அனுப்பி வைக்கப்பட்டனர்.அம்மாணவர்களை, பாரதி கிட்ஸ் பள்ளி தாளாளர் நாச்சிமுத்து, வழியனுப்பி வைத்தார். ஐயப்ப சேவா சங்க மாவட்ட தலைவர் ராம கிருஷ்ணன் தலைமையில், சுனில்குமார் உள்ளிட்டோர் உடன் சென்றனர். இவர்கள், வரும் 17ம் தேதி வரை, சபரிமலையில் தங்கியிருந்து, சேவை செய்வர்.