ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் கார்த்திகை மகாதேவ அஷ்டமி தினத்தையொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமிக்கு அதிகாலையில் ருத்ரா பாராயணம், அபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை செய்யப்பட்டு, அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.