பதிவு செய்த நாள்
16
டிச
2014
03:12
பொள்ளாச்சி : பொள்ளாச்சி பகுதிகளில் இன்று சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்புயாக பூஜைகள் நடைபெறுகின்றன. ஜோதிட கணிதப்படி துலாம் ராசியிலிருக்கும் சனிபகவான், இன்று பெயர்ச்சியடைந்து விருச்சிக ராசிக்கு வருகிறார். 8 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் இந்த சனிபெயர்ச்சியை முன்னிட்டு, பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில் சிறப்பு யாக பூஜைகள் நடைபெறுகின்றன. பொள்ளாச்சி திப்பம்பட்டி கமலகாமாட்சியம்மன் கோவிலில் இன்று மதியம் 12.00 மணி முதல் மாலை 3.00 வரை சனிப்பெயர்ச்சி யாகம் நடைபெற உள்ளது. இதற்கு துணை சபாநாயகர் ஜெயராமன் தலைமை வகிக்கிறார். யாகத்திற்கான ஏற்பாடுகளை ஜோதிடர் ஜோதிகிருஷ்ணா செய்துள்ளார். இதற்காக திருநள்ளாறு, திருநரையூர், திருக்கொள்ளிக்காடு, குச்சனூர் உள்ளிட்ட சனி பரிகார தலங்களில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு பக்தர்களுக்கு தெளிக்கப்பட உள்ளது. மேலும், 27 நட்சத்திரங்களுக்கும் தனித்தனி யாகம், சனி பிரீதி, சங்கல்ப பரிகாரம் செய்யப்படும். தொடர்ந்து உலக நன்மைக்கான யாகமும் நடைபெற உள்ளது. இதே போல், ஒடையகுளம் ராஜராஜேஸ்வரி காமாட்சியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள நவக்கிரக சன்னதியில் மாலை 6.00 மணிக்கு சனிப்பெயர்ச்சி சிறப்பு பூஜை நடைபெறும். இதையொட்டி, திருக்குட வழிபாடு, சிறப்பு வேள்வி, சிறப்பு அபிேஷக வழிபாடு நடைபெறும்.