வால்பாறை : வால்பாறை ஐயப்பசுவாமி கோவிலில் மண்டல பூஜைத்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது, வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஐயப்பசுவாமி கோவில் 29ம் ஆண்டு மண்டல பூஜைத்திருவிழா நாளை (17ம்தேதி) காலை 9.15 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.தொடர்ந்து நடைபெறும் விழாவில் வரும் 20ம் தேதி அன்னதானம் வழங்கும் விழாவும், மாலை 3.00 மணிக்கு பாலகொம்பு எடுத்துவரும் நிகழ்ச்சியும் நடக்கின்றன. வரும் 21 ம் தேதி ஐயப்பசுவாமி அலங்காரத்தேரில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.விழாவிற்கான ஏற்பாடுகளை அகிலபாரத ஐயப்பசேவா சங்க தலைவர் மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.