Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தர்ம முனீஸ்வரர் கோயிலில் மார்கழி ... சபரிமலையில் நாளை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் தங்க அங்கி அணிவித்து டிச.27ல் மண்டல பூஜை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 டிச
2014
12:12

சபரிமலை: டிச., 27ம் தேதி பகல் 12.30 மணிக்கு ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து மண்டல பூஜை நடைபெறுகிறது. அன்று காலை 11 மணி வரை மட்டுமே நெய்யபிஷேகம் நடைபெறும். இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் நிறைவு கட்டத்தை நெருங்கி வருகிறது. கார்த்திகை முதல் தேதி தொடங்கி 41 நாட்கள் நடைபெறும் பூஜை ஒரு மண்டலம் எனப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மண்டல காலம் கடந்த மாதம் 17ம் தொடங்கி, 30 நாட்கள் முடிந்துள்ளது. இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில் மண்டல பூஜை ஏற்பாடுகள் துவங்கியுள்ளன. மகரவிளக்கு நாளில் பந்தளம் மன்னர் கொண்டுவரும் ஆபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படுகிறது. மண்டலபூஜையின் போது அணிவிக்க திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் தங்க அங்கி ஒன்றை காணிக்கையாக வழங்கினார். ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் வைக்கப்பட்டுள்ள இந்த அங்கி வரும் 23ம் தேதி பவனியாக எடுத்து வரப்படும். 26ம் தேதி மதியம் பம்பைக்கு வந்து சேரும். அதன் பின் தலைச்சுமையாக, மாலை 6.25 மணிக்கு சன்னிதானம் கொண்டுவரப்பட்டு, ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். 27ம் தேதி பகல் 12.30 மணிக்கு மண்டலபூஜை நடைபெறும் என தந்திரி கண்டரரு ராஜீவரரு கூறினார். பூஜை நடத்துவதற்கு வசதியாக ஒரு மணி நேரம் முன்னதாக காலை 11 மணிக்கு நெய்யபிஷேகம் நிறைவு பெறும். தொடர்ந்து கோயில் முன்புறம் மண்டபத்தில் களபம் பூஜிக்கப்பட்டு பவனியாக கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அபிஷேகம் நடைபெறும். மண்டல பூஜை நாளில் இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். அதன் பின்னர் பக்தர்கள் சன்னிதானம் செல்ல அனுமதி கிடையாது. மகரவிளக்கு கால பூஜைக்காக டிச.,30 மாலை 5.30க்கு நடை திறக்கும். 31 அதிகாலை முதல் நெய்யபிஷேகம் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar