Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தேசமுத்து மாரியம்மன் கோவிலில் ... சஞ்சீவிமலையில் படி பூஜை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமநாதபுரம் கோயில்களில் சனிப்பெயர்ச்சி மகாயாகம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2014
02:12

பரமக்குடி : சனிப்பெயர்ச்சியையொட்டி, நேற்று பரமக்குடி பகுதியில் பல்வேறு கோயில்களில் நடந்த சனீஸ்வரருக்கு சிறப்பு ஹோமம் நடந்தது. பரமக்குடி முத்தாலம்மன் கோயில் படித்துறையில் சக்திகுமரன் செந்தில் கோயில் உள்ளது. இங்கு சனீஸ்வர பகவான் வெண்கலச்சிலை வடிவில் காக்கை வாகனத்துடன், தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். டிச., 16 ல், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நிர்வாக அறங்காவலர் அனந்தநாராயணன் தலைமையிலும் சனிப்பெயர்ச்சி மகாயாகம் நடந்தது. கிழக்குப்பகுதி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில், பொட்டிராஜன் தலைமையில் சனீஸ்வரர் சன்னதியில், சனீஸ்வர சாந்தி, நவக்கிரக ஹோமம் நடந்தது.

ராமநாதபுரம்: சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் மகா சாந்தி லட்சார்ச்சனை, பரிகார பூஜை நேற்று காலை 7 மணிக்கு துவங்கி இரவு 7:30 மணி வரை நடந்தது. மாலை 4:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை பரிகார பூஜைகள் நடந்தன. இதை முன்னிட்டு சனீஸ்வரனுக்கு 11 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

திருவாடானை: சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, நேற்று திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு ஹோமங்கள் நடந்தது. சிவாச்சாரியார்கள் வேதமந்தரங்கள் முழங்க காலை 7 மணிக்கு சனீஸ்வரருக்கு தீப, ஆராதனைகள் நடந்தது. காலை 10 மணி முதல் மாலை வரை நடந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் சனிஸ்வரரை தரினசம் செய்தனர்.

உத்திரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் சனீஸ்வரருக்கு தனி சன்னதி உள்ளது. சனிப்பெயர்ச்சியை ஒட்டி நேற்று சனீஸ்வரருக்கு சிறப்பு ஹோமம் நடந்தது. 18 வகையான மூலிகை அபிஷேகம், சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. முன்னதாக, ஹோம வேள்விகள் வளர்க்கப்பட்டு , சங்கல்ப பூஜை நடந்தது.

சாயல்குடி: மாரியூரில் ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானம் ஸ்ரீ பவள நிறவள்ளியம்மன், சமேத பூவேந்தியநாதர் கோயிலில் சனீஸ்வரருக்கு சனிப்பெயற்சி சிறப்பு ஹோமம் நடந்தது. பகல் ஒரு மணிக்கு ஹோமம் வளர்த்தல், 1.45 மணிக்கு அபிஷேகம், 2.40 மணிக்கு தீப ஆராதனை நடந்தது. பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar