பரமக்குடி பெருமாள் கோயிலில்"பகல் பத்து உற்சவம் துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23டிச 2014 12:12
பரமக்குடி : பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை யொட்டி, "பகல் பத்து உற்சவம் நேற்று துவங்கியது. பெருமாள் கோயில்களில் மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி நாளில், பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும். இதன்படி நேற்று பகல் பத்து உற்சவத்தின் முதல் நாளன்று சுந்தரராஜப் பெருமாள், சவுந்தரவல்லித் தாயார் மண்டபத்திற்கு எழுந்தருளினார். கோயில் அர்ச்சகர்கள் ஸ்ரீதரன், சத்யநாராயணன், ராகவன் பட்டாச்சார் உள்ளிட்டோர் நாலாயிர திவ்ய பிரபந்தங்களை வாசித்தனர். தொடர்ந்து டிச., 31 ல் மாலை 5:00 மணிக்கு பெருமாள் "மோகினி அவதாரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ஜன., 1 ல் காலை 4:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன், தீபாரானைகள் நடந்து, காலை 5:00 மணிக்கு "பரமபத வாசல் திறக்கப்படவுள்ளது. அன்று இரவு முதல் ஜன., 10 வரை தினமும் இரவு 7:00 மணிக்கு "இராப்பத்து உற்சவம் நடக்கிறது. பகவதர்கள் குழுவினர் விழா நாட்களில் பக்தி பாடல்கள் பாடுவர். ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.