Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமநாமம், காயத்ரி மந்திரம் இரண்டில் ... சின்ன இயேசு பாலா! உன் சின்ன பாதம் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இதோ ஒரு கல்விக்கோயில்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 டிச
2014
02:12

மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க புதன் பகவான் வழிபட்ட, திருமேற்றளீஸ்வரர் கோயிலுக்குச் சென்று வரலாம். காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தில் இந்தக் கல்விக்கோயில் உள்ளது.பாற்கடலில் பள்ளிகொண்டிருந்த மகாவிஷ்ணுவிற்கு லிங்க வடிவம் பெற வேண்டும் என்ற ஆசை எழுந்தது. இதற்காக தவம் செய்ய தொடங்கினார். சிவனும் அவருக்கு அனுமதியளிக்க எண்ணம் கொண்டார். அவரிடம் இத்தலத்தில் மேற்கு நோக்கி சுயம்புவாக வீற்றிருக்கும் தன்னை வேண்டி, தவம் செய்து வழிபட்டு வர லிங்க வடிவம் கிடைக்கப் பெறும் என்றார். அதன்படி இத்தலம் வந்த மகாவிஷ்ணு, இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, வேகவதி நதிக்கரையில் சிவனை நோக்கி கிழக்கு பார்த்து நின்ற கோலத்தில் தவம் செய்தார். சிவத்தல யாத்திரை சென்ற திருஞானசம்பந்தர், இத்தலம் வந்த போது தவக்கோலத்தில் நின்று கொண்டிருப்பது சிவன் என எண்ணிக்கொண்டு பதிகம் பாடினார். அவரது பாடலில் மனதை பறிகொடுத்த விஷ்ணு, அப்படியே உருகினார்.பாதம் வரையில் உருகிய விஷ்ணு, ஏறத்தாழ லிங்க வடிவம் பெற்றபோது, சம்பந்தர் பாடலை முடித்தார். விஷ்ணுவின் பாதம் மட்டும் <<உருகாமல் அப்படியே இருந்தது. இதை நிரூபிக்கும் வகையில் கருவறையில் லிங்கமும், அதற்கு முன் பாதமும் இருப்பதை காணலாம். சம்பந்தரின் பாடலுக்கு உருகியவர் என்பதால் இவர், ‘ஓதஉருகீஸ்வரர்’ என்ற பெயர் பெற்றார்.சிறப்பம்சம்: சிவன் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இங்கு இரண்டு கருவறைகள் உள்ளன. ஒன்றில் ஓத உருகீஸ்வரரும், மற்றொன்றில் திருமேற்றளீஸ்வரரும் உள்ளனர். தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 234 வது தலம். தலவிநாயகரான சித்திவிநாயகர் சந்நிதியின் ராஜகோபுரம் மூன்று நிலை உடையது.காஞ்சிபுரத்தில் உள்ள சிவன் கோயில்களுக்கு காமாட்சியே பிரதான அம்பாளாக கருதப்படுவதால் இங்குள்ள பெரும்பாலான கோயில்களில் அம்பாள் இருப்பதில்லை. ஆனால், இந்தக் கோயிலில் பராசக்தி அம்பாள் சாந்தமே வடிவாக அருள்புரிகிறாள்.கல்வி ஸ்தலம்: சிவன் மேற்கு நோக்கி இருப்பதால் இவருக்கு ‘மேற்றளீஸ்வரர்’ (மேற்கு பார்த்த தளி) என்ற பெயர் வந்தது. தளி என்றால் ‘கோயில்’ என்றும் பொருள் உண்டு. ஓதவுருகீஸ்வரர் இருக்கும் கருவறையில் சிவ வடிவான லிங்கத்தையும், அருகே திருமாலின் பாதத்தையும் ஒரே நேரத்தில் தரிசிப்பதால் வாழ்க்கையில்  குறைவிலாத வளம் பெறலாம். திருநாவுக்கரசர் இத்தலத்தை, “கல்வியைக் கரையிலாத காஞ்சி மாநகர் தன்னுள்ளால்” என்று குறிப்பிட்டு பாடியுள்ளார். இந்தக் கோயிலில் உள்ள மேற்றளீஸ்வரரை புதன் வழிபட்டுள்ளார். எனவே, இது ஒரு கல்வி ஸ்தலமாக விளங்குகிறது. மேற்றளீஸ்வரரை வணங்கினால் படிப்பில் சிறந்து விளங்கலாம்.திருமேற்றளீஸ்வரரே இங்கு பிரதானம் என்றாலும், கோயில் இருக்குமிடம் திருக்கச்சி மேற்றளி என அழைக்கப்பட்டாலும் , கோயிலின் ராஜகோபுரமும், பிரதான வாசலும் ஓத உருகீஸ்வரருக்கு உரியதாகவே உள்ளது. இவருக்கு நேரே உள்ள நந்திக்குத்தான் பிரதோஷ வழிபாடுகளும் நடக்கிறது. கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தியின் கீழ் இருக்கும் முயலகன் அவருக்கு இடது பக்கமாக திரும்பியிருப்பது வித்தியாசமான கோலம் ஆகும். இங்குள்ள ஒரு சந்நிதியில் திருஞானசம்பந்தர் சிவனை வணங்கிய கோலத்தில் இருக்கிறார். இவருக்கு ஆளுடைப்பிள்ளையார், சம்பந்த பிள்ளையார் என்ற பெயர்களும் உள்ளதால் இவரது பெயரால் இப்பகுதி ‘பிள்ளையார் பாளையம்’ என்றழைக்கப்படுகிறது. இருப்பிடம்: காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு கி.மீ., திறக்கும் நேரம்: காலை 6.00-12.00, மாலை 5.00- இரவு 8.00.போன்: 94437 99643.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar