Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி ஏழுமலையான் உண்டியல் ... குடியநல்லூரில் 3 கோவில்கள் சீரமைப்பு குடியநல்லூரில் 3 கோவில்கள் சீரமைப்பு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோட்டீஸ்வரர் கோவில் திருப்பணிகள் மந்தநிலை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 டிச
2014
12:12

அவலூர்பேட்டை: ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருவளூர் கோட்டீஸ்வரர் கோவில் திருப்பணிகள் முழுமையாக நடக்க அறநிலைய துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேல்மலையனூர் ஒன்றியம் பெருவளூர் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் காலத்தை சேர்ந்த கோகிலாம்பாள் உடனுறை கோட்டீஸ்வரர் கோவில் உள்ளது.

Default Image
Next News

சதுர வடிவ கருவறையில் ஆவுடையார் மீது கோட்டீஸ்வரர் அமைந்துள்ளார் என்பது இதன் தனி சிறப்பு. கருவறையை சுற்றிலும் கிழக்கு திசை நீங்கலாக மற்ற திசைகளில் தேவ கோட்டங்கள் உள்ளன. துர்க்கை அம்மன் சிலையும் உள்ளது. முருகன், விநாயகர் மற்றும் கோகிலாம்பாள் ஆகியோருக்கு தனி சன்னதிகள் காணப்படுகின்றன. மகிழ மரம் கோவிலின் ஸ்தல விருட்சகமாகவும், செப்பினாலான கொடி மரம் உயர்ந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. தீபரட்சகர் எனும் சித்தர் இந்த கோவிலில் ஒரு மண்டலம் (48 நாட்கள்) தங்கி ஆன்மிக சேவையாற்றினார்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரின் அருளினால் கோகில ஜோதியை அங்கு தரிசித்தார்.அவர் அங்கு ஒரு கோடி தீபத்தை ஏற்றி வழிபட்டார். இதனால் சிறந்த பலன் தரும் தீபஸ்தலமாக, இக்கோவில் விளங்கியது. இந்த பகுதியில் உள்ள கோவிலினால், பெரிய தீபங்கள் ஜொலிக்கும் ஊர் என்பதே பெருவளூர் என்று பெயர் வர காரணம் ஆனது. மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு மாசி மாத திருவிழாவின் போது தேருக்கான சீலைகள் இந்த கோவிலிலிருந்து தான் வழங்கி வந்தனர்.

இவ்வளவு மகிமை வாய்ந்த இந்த கோவில் சிதிலமடைந்து, பாழடைந்து காணப்பட்டது. இதனால் கிராம மக்கள் சார்பில் கும்பாபிஷேகம் செய்ய கடந்த 2007ம் ஆண்டு தீர்மானிக்கப்பட்டது. இந்து சமய அறநிலைய துறை சார்பில் திருப்பணிகளை செய்வதற்கு அப்போது சம்மதித்து, பணிகள் மந்த நிலையில் நடந்து வந்தது. தற்போது இந்து சமய அறநிலைய துறையின் சார்பில் 16 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சிவன் மற்றும் அம்மன் சன்னதிகள் சீரமைக்கும் பணிகள் முடிந்துள்ளன. மேலும், 4 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கோவிலுக்கு சுற்று சுவர் அமைக்கும் பணியும் நடந்துள்ளது. கோவிலின் உட்புறம் தரைப்பகுதியும், ராஜ கோபுரங்கள் அமைத்தல், கொடி மரம் சீரமைத்தல், கல்பாலிஷ், திருத்தேர் அமைத்தல், வீதி உலாவிற்கான வாகனங்கள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்வதற்கு இது வரையில் நிதி வசதி ஏற்பாடு செய்யப்படவில்லை. கோவில் சிதிலமடைந்த நிலையினால் பங்குனி மாதத்தில் நடக்கும் 10 நாள் பிரம்மோற்சவம், 7 நாள் நடக்கும் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா, பிரதோஷம், வேதபாராயணம், பஜனை உள்ளிட்ட உற்சவங்களை நடத்த இயலாமல் தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்.

எட்டு ஆண்டுகளாகியும் இதுவரையிலும் திருப்பணிகள் முழுமையாக செய்ய இயலாமல் போதிய நிதி ஆதாரமில்லாத வகையில் கிராம மக்கள் பரிதவித்து வருகின்றனர். ஏப்ரல் 25 ம்தேதி கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டுள்ளனர். நிதி பற்றாக்குறையை போக்கும் விதமாக பக்தர்கள் மற்றும் அரசு மூலம் கோவில் திருப்பணிகள் முழுமையாக நடக்க திருப்பணிக்கு நிதி உதவி அளிக்க முன்வர வேண்டும். வரலாற்று சிறப்பு மிக்க கோவிலை காப்பாற்றும் விதமாக திருப்பணி முழுமையாக நடக்க அறநிலைய துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 கோவை: ஆர்.எஸ்.புரம் அன்னபூர்ணேஸ்வரி கோயிலில், தீபாவளி பண்டிகையையொட்டி,  1,008 லட்டுகளால் கருவறை ... மேலும்
 
temple news
 தீபாவளி பண்டியை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; தீபாவளியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன்நகர் கோயில்களில் ... மேலும்
 
temple news
 திண்டிவனம்: தீபாவளியை முன்னிட்டு, திண்டிவனத்தில் பெண்கள் கேதார கவுரி நோன்பு எடுத்து வழிப்பட்டனர். ... மேலும்
 
temple news
 விழுப்புரம்: விழுப்புரம் மழுக்கரமேந்திய அமைச்சார் அம்மன் கோவிலில் பக்தர்கள் சதுர்தசி நோன்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar