சென்னை தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26டிச 2014 02:12
சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நடந்த சிறப்பு வழிபாட்டில், ஏராளமானோர் கலந்துகொண்டனர். சென்னை சாந்தோமில் உள்ள புனித தோமையார் தேசிய திருத்தலத்தில் நள்ளிரவில் நடந்த ஜெப வழிபாட்டில், ஏராளமானோர் பங்கேற்றனர். இதை முன்னிட்டு, தேவாலயத்தில் மிக பிரமாண்ட குடில்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தலைமை பாதிரியாரின் முன்னிலையில் நடந்த ஜெப வழிபாட்டில் ஏராளமானோர் பங்கேற்றனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, தாங்கள் வாங்கி வந்த பரிசு பொருட்களை ஒருவருக்கு ஒருவர் வழங்கி, தங்கள் அன்பை பரிமாறிக்கொண்டனர். l பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில், நேற்று முன்தினம் இரவு 12:00 மணி முதல், நேற்றிரவு 9:00 மணி வரை, சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. ஏசு கிறிஸ்து பிறந்த நள்ளிரவு 12:00 மணியளவில், பங்கு தந்தை பெல்லார்மீன் தலைமையில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.