மயிலம்: மயிலம் அடுத்த தீவனூரில் வாசன் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. த.மா.கா., தலைவர் வாசன் 50வது பிறந்த நாளை முன்னிட்டு தீவனூர் விநாயகர் கோவிலில் மாவட்ட முன்னாள் துணைத்தலைவர் காமராஜ் தலைமையில் சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. முன்னாள் மாநில துணைத் தலைவர் கோபிநாத், மூப்பனார் பேரவை மாநில துணைத் தலைவர் சம்பத், மயிலம் வட்டார நிர்வாகிகள் அப்துல் வகாப், லட்சுமணன், இளவழகன், கோவிந்தராஜிலு, மகேஷ் குமார், நமச்சிவாயம், முத்துராமன், கோவிந்தராஜ், மாரியம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.