இறைவனை வணங்குகிறேன், அவனது அடியானாக இருக்கிறேன், முழுநேரமும் இறைப்பணிக்கே செலவிடுகிறேன் என்று சொல்லிக்கொண்டு, குடும்பத்திற்கான கடமை என்றும் மூன்றெழுத்தைச் செய்யாமல் இருக்கக்கூடாது.திருக்குர்ஆன் இதுபற்றி கூறும்போது தொழுகை முடிந்தவுடன் இறைவனின் பூமியில் பரந்து விடுங்கள். இறைவன் தன் பூமியில் வைத்திருக்கின்ற வாழ்வாதாரங்களை அடைந்து கொள்ளுங்கள். அதிலிருந்து முழுபலன்களை அடையுங்கள். தம் பங்கிற்காக வாழ்வாதாரத்தைத் தேடுவதில், உங்கள் ஆற்றல்கள் அனைத்தையும் செலவிடுவதில் எந்தக் குறைபாடும் வைக்காதீர்கள். காரணம், தம் தேவைகளுக்காக மற்றவர்களைச் சார்ந்திருப்பது, ஓர் இறை நம்பிக்கையாளனுக்கு ஏற்ற செயல் அல்ல. அதேபோல், தம்மைச் சார்ந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் குறைபாடு வைத்து, அவர்களைக் கவலையிலும் நிராசையிலும் ஆழ்த்தி விடுவதும் ஏற்ற செயல் அல்ல என்கிறது. எனவே, இறைத்தொண்டுடன் குடும்பம் மற்றும் நம்மைச் சார்ந்தவர்களுக்கான கடமையையும் செய்து இறைவனின் அருளைப் பெறுங்கள்.