வைகுண்ட ஏகாதசியையொட்டி 75 ஆயிரம் பிரசாத லட்டு "தயார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31டிச 2014 02:12
விழுப்புரம்: வைகுண்ட ஏகாதசியை யொட்டி விழுப்புரம் பெருமாள் கோவிலில், 75 ஆயிரம் பிரசாத லட்டுகள் தயாரிக்கப் பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசியை யொட்டி விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் நாளை( 1ம் தேதி) சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக் கிறது. இதையொட்டி திருப்பணி குழு சார்பில் 75 ஆயிரம் லட்டுகள், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. விழுப்புரம் விஸ்வகர்மா மண்டபத்தில் திருப்பணி குழு தலைவர் ஜோதி தலைமையில் பிரசாத லட்டுகள் தயாரிக்கும் பணி நடந்தது. நிர்வாகிகள் கலியபெருமாள், தேவராஜன், கோவிந்தன், சித்திரவேல், துரைகண்ணு, பாலு, கருணாநிதி, சமையலர் சூரியநாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.