பதிவு செய்த நாள்
01
ஜன
2015
11:01
தேவிபட்டினம்: தேவிபட்டினம் கடலில் அமைந்துள்ள 9 நவக்கிரகங்கள் ராமபிரானால் தரிசிக்கப்பட்ட இடம் என்பதால், உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு நவக்கிரக தோஷ நிவர்த்தி, திருமணத்தடை, முன்ஜென்ம பாவங்கள், தர்ப்பணம் உள்ளிட்டவைகளுக்கு நிவர்த்தி வேண்டியும், கல்வி, ஆயுள், செல்வம், பெருகவும் பரிகார பூஜைகள் செய்யப் படுகின்றன. இதனால், நவபாஷாண கடற்கரைக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்களிடம் ஊராட்சி சார்பில் நுழைவு கட்டணமாக, ரூ. 5 வசூலிப்பதற்கான டெண்டர் நேற்று நடந்தது. கட்டண வசூலிக்கும் உரிமை வேண்டி 3 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், சித்தார்கோட்டை வெற்றி என்பவர் அதிக தொகையாக ரூ.22லட்சத்து 101 க்கு ஏலம் எடுத்ததாக, ஊராட்சி தலைவர் ஜாகிர்உசேன் அறிவித்தார்.