பதிவு செய்த நாள்
01
ஜன
2015
11:01
வேலூர்: அரக்கோணம் அடுத்த திருவாலங்காடு, வடாரண்யேஸ்வர சுவாமி கோவிலில், வரும் 4ம் தேதி இரவு, ஆருத்ரா மகா அபிஷேகம் நடக்கிறது. நடராஜ பெருமானின் முதல் சபையான ரத்தின சபை, திருவாலங்காடு வடாண்யேஸ்வர சுவாமி கோவிலில் உள்ளது. ஊர்த்துவ தாண்டவமாக நடராஜர் காட்சி தரும் இந்த கோவில், அப்பர், திருஞான சம்பந்தர், சுந்தரமூர்த்தி சுவாமிகள், காரைக்கால் அம்மையார் ஆகியோரால் பாடல் பெற்றது. இங்கு ஆருத்ரா அபிஷேகம், வரும் 4ம் தேதி, இரவு 9:00 மணிக்கு, கோவில் ஸ்தல விருட்சமான ஆலமரத்தின் கீழ் உள்ள ஆருத்ரா மண்டபத்தில் நடக்கிறது. மறுநாள் 5ம் தேதி, அதிகாலை 5:00 மணிக்கு, கோபுர தரிசனமும், பிற்பகல் 1:00 மணிக்கு, அனுக்கிரக தரிசனமும், 6ம் தேதி காலை 8:45 மணிக்கு, சாந்தி அபிஷேகமும் நடக்கிறது.