பதிவு செய்த நாள்
02
ஜன
2015
03:01
ராமேஸ்வரம் : வைகுண்ட ஏகாதசி யொட்டி, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் மகாவிஷ்ணு, ஸ்ரீ தேவி, ஸ்ரீ பூமாதேவி சமேதராக தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி, பக்தருக்கு தீர்த்தம் வழங்கினர். நேற்று வைகுண்ட ஏகாதசி யொட்டி, ராமேஸ்வரம் கோயிலில் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய மகாவிஷ்ணு, ஸ்ரீ தேவி, ஸ்ரீ பூமாதேவி சமேதராக கோயில் நான்கு ரதவீதி வழியாக உலா வந்து, ராமர் தீர்த்தம் குளத்தில் எழுந்தருளினர். பின், பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பின், மகா தீபாராதனை நடந்தது. பின்னர் அங்கிருந்து புறப்பாடாகி கோயிலுக்குள் வந்தனர். நேற்று மாலை, கோயிலுக்குள் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, ஸ்ரீ விஷ்ணு சமேதராக எழுந்தளியதும், மகா தீபாரதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.