பதிவு செய்த நாள்
02
ஜன
2015
04:01
பரமக்குடி : பரமக்குடியில் உள்ள அனைத்து பெருமாள் கோயில் களிலும், நேற்று "கோவிந்தா கோஷம் முழங்க "சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இராப்பத்து உற்சவம் துவங்கியது.
பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் டிச., 22 ல் துவங்கிய ஏகாதசி விழாவின் பகல் பத்து உற்சவத்தை முன்னிட்டு தினமும் பெருமாள் ஏகாந்த சேவையில் சவுந்தர வல்லி தாயார் மண்டபத்திற்கு எழுந் தருளினார். நேற்று காலை 5 மணிக்கு, பெருமாள் ராஜ கிரீடத்துடன் சர்வ அலங்காரத்தில் "பரமபதவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் "கோவிந்தா கோஷம் முழங்க வரவேற்றனர். தொடர்ந்து கோயில் பிரகாரங்களில் வலம் வந்து, ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றும் வைபவம் நடந்தது. இரவு 7 மணிக்கு துவங்கிய "இராப் பத்து உற்சவம் 10 நாட்கள் நடைபெறவுள்ளது. துவாதசி நாளான இன்று காலை 9 மணிக்கு பெருமாள் கருடவாகனத்தில் வீதியுலா வரவுள்ளார். எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கோயிலில், பெருமாள் காலை 6 மணிக்கு சொர்க்க வாசலைக் கடந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அனுமார் கோதண்ட ராமசாமி கோயிலில் காலை 6 மணிக்கு ராமர் கருட வாகனத்தில் காட்சி யளித்தார்.
திருப்புல்லாணி ஆதிஜெகந் நாதப்பெருமாள் கோயிலில் நேற்று இராப்பத்து உற்சவத்தின் துவக்கத்தை முன்னிட்டு பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி யுடன் திருவாபரணங்கள் சாத்தப் பட்டு, பட்டுத்தி, மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார். முன்னதாக, உற்சவ மூர்த்திகள் மற்றும் நம்மாழ்வார், பெரி யாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோருக்கு திருமஞ்சன அபிஷேகம் நடந்தது. மாலை 3 மணியளவில் விஸ்வ ரூப தரிசனம் நடைபெற்று, இரவு 7 மணிக்கு பரமபத வாசல் எனப் படும் சொர்க்கவாசல் திறக்கப் பட்டது. வேத பாராயண, ஆகம இதி காச முறை வேதங்கள் ஓதப் பட்டன. கோயில் பட்டாச் சாரியார்கள் நாலாயிர திவ்ய பிரபந்தப் பாடல்கள், பெரி யாழ்வார் பாசுரம் பாடினர். ஏற்பாடுகளை சமஸ்தான, தேவ ஸ்தான நிர்வாகத்தினர் செய் திருந்தனர்.