திருக்கோவிலூர்: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருக்கோவிலூர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் வகையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். வீரட்டானேஸ்வரர் கோவிலில் மூலவருக்கு அதிகாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வெள்ளி கவசம் அணிவித்து தீபாராதனை நடந்தது. என்.ஜி.ஜி.ஓ., நகரில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் நள்ளிரவு 12 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, மகாஅபிஷேகம், வெள்ளிக் கவசத்தில் சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. கோவில் நிர்வாகத்தின் சார்பில் கூட்டு பிரார்த்தனை நடந்தது.