திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடந்து வரும் ராபத்து உற்சவத்தின், மூன்றாம் நாளில், சவுரிக்கொண்டை, முத்துச்சரம், புலிநகம், ரத்தின அபயஹஸ்தம் உள்ளிட்ட ஆபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து ஆயிரங்கால் மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.