Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்திரகோசமங்கையில் ஆருத்ரா தரிசனம்! ஊட்டி காசிவிஸ்வநாதர்  திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்! ஊட்டி காசிவிஸ்வநாதர் திருக்கல்யாண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தில்லையம்பல நடராஜா ஆருத்ரா தரிசனம் ஸ்பெஷல்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 ஜன
2015
10:01

திருவாதிரை வழிபாடு: மார்கழி திருவாதிரை விரதம் சுலபமானது. அன்று சிவாலயம் சென்று நடராஜரைத் தரிசிக்க வேண்டும். வீட்டில் களி சமைத்து திருவிளக்கின் முன் படைத்து தானம் செய்ய வேண்டும்.

அன்று முழுவதும் சிவபுராணம், தேவாரம், திருவாசகத்தை பக்தியுடன் படிக்க வேண்டும்.

திருவாலங்காடு (திருவள்ளூர் மாவட்டம்), சிதம்பரம், மதுரை, திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய நடராஜரின் பஞ்ச சபைகளில் ஏதாவது ஒன்றுக்குச் சென்று நடராஜரை வழிபட்டு வருவது சிறப்பானது. பெண் குழந்தைகளின் சிறப்பான எதிர்காலம் கருதி 12 திருவாதிரை நட்சத்திரங்களில் தொடர்ந்து விரதமிருப்பது பலனளிக்கும்.

"நடராஜர் பெயர்க்காரணம்: தில்லை மரங்கள் அடர்ந்த வனமான சிதம்பரத்தில் ஆடும், நடராஜரின் திருநடனம் காண, வியாக்ர பாதர் என்னும் புலிக்கால் முனிவரும், பதஞ்சலி முனிவரும் தவம் செய்து வந்தனர். அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நன்னாள் வந்தது. இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் அங்கே கூடினர். துந்துபிகள், பானுகம்பன் போன்ற தேவலோக இசைக் கலைஞர்கள் வாத்தியங்களை இசைத்தனர். பிரம்மா,விஷ்ணு, லட்சுமி, சரஸ்வதியும் வந்து

சேர்ந்தனர். மூவாயிரம் தில்லை அந்தணர்களும் அங்கே ஒன்று கூடினர். அப்போது, நந்தியின் மீது நடராஜப் பெருமான் எழுந்தருளினார். அம்பாள் பார்வதி, "சிவகாமி (சிவன் மீது விருப்பம் கொண்டவள்) என்ற பெயருடன் அருகில் நின்றாள். அப்போது சிவன் ஆனந்த நடனம் ஆடினார். எல்லாரும் நடனம் கண்டனர். நடனம் ஆடியதால், "நடராஜா என்று போற்றினர்.

இசை பிறந்த கதை: படைப்பவரான பிரம்மா மட்டுமே, ஒவ்வொரு முறை உலகம் அழியும் போதும் இறந்து போவார். உலகம் தோன்றியதும் அவரே இறைவனால் முதலில் எழுப்பப்படுவார். இவ்வாறு அவர் 32 முறை பிறந்து இறந்திருக்கிறார். அந்த 32 பிரம்ம தலைகளையும், நடராஜர் தனது கழுத்தில் அணிந்திருப்பார்.

உலகை அழிப்பதும், ஆக்குவதும் தானே என்பதைக் குறிப்பதே சிவனின் இந்தக் கோலம். அவர் நடனம் ஆடும் போது, தலையில் சூடியிருக்கும் பிறைநிலவில் இருந்து அமிர்தம் வழிந்து, பிரம்ம தலைமாலையில் விழும். அமிர்தம் பட்டால் இறந்தவர்கள் உயிர் பிழைத்து விடுவர். அந்த பிரம்ம தலைகளும் உயிர் பெற்று நடராஜரைப் புகழ்ந்து பாடும். பாட்டும், ஆட்டமும் இணையும் போது ஆனந்தம் ஊற்றெடுக்கும். இந்த பிரம்ம கபாலங்களில் இருந்தே இசை பிறந்ததாக சங்கீத சாஸ்திரம் கூறுகிறது. இதனால் தான் கலைஞர்கள் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் அரங்கேற்றம் நடத்த விரும்புகின்றனர்.

அங்குலம் அங்குலமாய் வர்ணனை :
நடராஜர் ஒரு காலை ஊன்றி மற்றொரு காலைத் தூக்கியபடி நடனமாடுகிறார். முயலகன் என்னும் அசுரன் மீது அவருடைய ஊன்றிய பாதம் அழுத்திப் பிடித்திருக்கிறது. இந்த அசுரன் "நான் என்னும் அகந்தையைக் குறிப்பவன். இந்த எண்ணம் நம்மிடம் எழுந்து விடக்டாது என்பதை உணர்த்தவே நடராஜர் இவ்வாறு கால் ஊன்றியிருக்கிறார். அவர் தனது கழுத்தில் பாம்பை அணிந்திருக்கிறார். பாம்பு ஒரு அழிவு சக்தி. மனிதனும் அழிவை உண்டாக்கும் தீய எண்ணங்களை அடக்கியாள வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.

நடராஜரின் விரிந்த ஜடை, நமக்கு பரந்த அறிவு வேண்டும் என்பதைக் குறிக்கிறது. கையிலுள்ள உடுக்கையும், நெருப்பும் பிறப்பையும், இறப்பையும் குறிக்கிறது. அவரது ஒரு கை அபயஹஸ்த நிலையில் உள்ளது. அதாவது, என்னைச் சரணடைந்தவர்கள் பயம் கொள்ளத் தேவையில்லை என்பதைக் காட்டுகிறது. அவரது இன்னொரு கை வரத ஹஸ்த நிலையில் உள்ளது. இது வேண்டிய வரத்தை நமக்கு அருள்கிறது. இதழில் புன்சிரிப்பும், முகத்தில் மலர்ச்சியும் மனதில் எப்போதும் ஆனந்தம் நிறைந்திருக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புனித சவான் மாதம் இரண்டாம் சோமவாரத்தை முன்னிட்டு, சிவ தரிசனம் செய்ய இராமேஸ்வரம், வாரணாசி, அயோத்தி ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் ஆடி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு இன்று அதிகாலை ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் கோயிலில் வெளிஆண்டாள் சந்நிதி உள்ளது. இங்கு ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் காட்சி ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருமங்கலம்; கள்ளிக்குடி தாலுகா செங்கப்படை கோயிலில் 68 ஆண்டுகளாக அணையாமல் தொடர்ந்து விளக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar