பதிவு செய்த நாள்
05
ஜன
2015
11:01
ஊட்டி : ஊட்டி காந்தல் காசிவிஸ்வநாதர் கோவிலில், நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
இதனை தொடர்ந்து, காலை, 10:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கலசபூஜை, மகாயாகம், தீபாராதனையும், காலை,11:30 மணிக்கு, காசிவிஸ்வநாத சுவாமி, விசாலாட்சி அம்பாளுக்கு திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. பகல்,1:00 மணிக்கு அன்னபிரசாதம் வழங்குதல், 2:00 மணிக்கு சிவகாமி அம்பாள் உடனமர் நடராஜ பெருமானுக்கு அபிஷேகமும், திருவெம்பாவையும் நடந்தது. 5ம் தேதி காலை, 6:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, ஆருத்ரா தரிசனம் நடக்கிறது.ஏற்பாடுகளை, மடாதிபதி மருதாசல அடிகள், தட்ஷிணாமூர்த்தி மடலாய அறங்காவலர் குழு, காசிவிஸ்வநாத சேவா சங்கம், முன்னேற்ற சங்கம், விசாலாட்சியம்பாள் மகளிர் குழுவினர் செய்திருந்தனர்.