பதிவு செய்த நாள்
05
ஜன
2015
12:01
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, நான்காம் நாள், ராப்பத்து உற்சவம் நேற்று நடந்தது. இதில், நீள்முடி அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், 20 நாட்கள் நடக்கும் வைகுண்ட ஏகாதசி விழாவின், பகல் பத்து திருநாள் கடந்த, 22ம் தேதி துவங்கி, 31 ம் தேதி வரை நடந்தது. கடந்த, 1ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதையடுத்து, ராப்பகல் உற்சவம் துவங்கியது. நான்காம் நாளான நேற்று, உற்சவர் நம்பெருமாள், நீள்முடி, வைர ஆபரணம், மகாலட்சுமி பதக்கம் மற்றும் முத்துமாலை அணிந்து மூலத்தானத்தில் இருந்து, நேற்று காலை, 11 மணிக்கு புறப்பட்டு, பக்தர்களுடன் சொர்க்கவாசல் வழியாக ஆயிரங்கால் மண்டப்பத்தில் உள்ள திருமாமணி மண்டப்பத்தில் எழுந்தருளினார். நேற்று மாலை, 5 மணி முதல் இரவு, 7 மணி வரை அரையர்கள் சேவை மற்றும் பொதுஜன சேவையும், இரவு, 8 மணி முதல், 9.30 மணிவரை உபயதாரர் மரியாதையும் நடந்தது. பிறகு, நம்பெருமாள் திருமாமணி மண்டப்பத்தில் இருந்து புறப்பட்டு, வீணை வாத்திய கருவிகளுடன் இரவு, 10. 30 மணிக்கு மூலஸ்தானம் சேர்ந்தார்.