திருவாரூர்: திருவாரூர், தியாகராஜ ஸ்வாமி கோவிலில், இன்று பாத தரிசன நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு, திருவாரூர் தியகராஜ ஸ்வாமி கோவிலில், நேற்று இரவு, தியாகேசப் பெருமானுக்கு முசுகுந்த சகஸ்ரநாம அர்ச்சனை, திருவாதிரை மகா அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து, இன்று அதிகாலை, நடராஜபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து, தியாகராஜ பெருமான் பதஞ்சலி வியாக்ரபாத முனிவர்களுக்கு பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சியும், நடராஜபெருமான் தரிசனமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் உள்துறைகட்டளை பரம்பரை அறங்காவலர் ராம்விதியாகராஜன், உதவி ஆணையர்கள் ரெத்தினவேல், சிவராம்குமார் மற்றும் அலுவலர்கள் செய்துள்ளனர்.