மயிலம்: ஆலகிராமம் எமதண்டீஸ்வர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. மயிலம் அடுத்த ஆலகிராமத்திலுள்ள திரிபுரசுந்தரி உடனுறை எமதண்டீஸ்வரர் பரிகார கோவிலில் காலை 5:00 மணிக்கு ஆருத்ரா தரிசன சிறப்பு வழிபாடு நடந்தது. மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். காலை 6:00 மணிக்கு கோவில் வளாகத்திலுள்ள எமதண்டீஸ்வரர், திரிபுர சுந்தரிக்கு மகா தீபாராதனை நடந்தது. கோவிலிலுள்ள சித்தர் ஜீவ சமாதிக்கு மகா அபிஷேகம் வழிபாடு நடந்தது. மயிலம், திண்டிவனம், புதுச்சேரி பகுதிகளிலிருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை சுந்தரமூர்த்தி குருக்கள் செய்திருந்தார்.