உடுமலை: உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் நடந்து வந்த ஆருத்ரா தரிசன விழா இன்று, மகா அபிேஷகத்துடன் நிறைவு பெறுகிறது. உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழா கடந்த டிச., 27ல் துவங்கியது; இன்று இரவு 7.00 மணிக்கு, மகா அபிேஷகம் நடக்கிறது. ஜன, 3ம் தேதி வரை, மாணிக்கவாசருக்கு அபிேஷக ஆராதனை நடந்தது. நேற்றுமுன்தினம் சிதம்பரேஸ்வரர் சுவாமிக்கும் சிவகாமி அம்மனுக்கும் திருக்கல்யாணமும், நேற்று காலை ஆருத்ரா தரிசனமும் நடந்தது. ஆருத்ரா தரிசன விழாவின் நிறைவு நாளான இன்று இரவு 7.00 மணிக்கு, சுவாமிக்கு மகா அபிேஷகம் செய்யப்படுகிறது.