பதிவு செய்த நாள்
08
ஜன
2015
11:01
திருத்தணி: நெமிலி கிராமம், வைகுண்ட பெருமாள் கோவிலில் போதிய பராமரிப்பில்லாததால் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. அதையடுத்து, ÷ காவில் வளாகத்தில் சமூக விரோதிகள் அட்டகாசம் அதிகரித்து உள்ளது. திருவாலங்காடு ஒன்றியம், நெமிலி கிராமத்தில், வைகுண்ட பெருமாள் ÷ காவில் உள்ளது. அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில், இருவேளை பூஜைகள் நடக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன், ÷ காவில் நுழைவு வாயில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதனால், கோவில் உண்டியல் மற்றும் கோவில் உள்ளே இருக்கும் முக்கிய பொரு ட்களுக்கும் பாதுகாப்பு இல்லை. மேலும், இரவு நேரத்தில் சில சமூக விரோதிகள் கோவில் உள்ளே புகுந்து அட்டகாசம் செய்கின்றனர். நுழைவுவாயில் சுவர் இடிந்ததால், பக்தர்களுக்கும், கோவிலுக்கும் பாதுகாப்பு இல்லை. புதிதாக சுற்றுச்சுவர் கட்டி, அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.