புதுச்சேரி: முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவிலில், மார்கழி மகோற்சவத்தை முன்னிட்டு இசை நிகழ்ச்சி நடந்தது. முதலியார்பேட்டை வன்னியபெருமாள் கோவிலில், 3ம் ஆண்டு மார்கழி மகோற்சவம் கடந்த 16ம் தேதி துவங்கியது. தினமும் திருப்பாவை, சொற்பொழிவுகள் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு 7:00 மணிக்கு, பேராசிரியர் பாலமுரளி குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.