குருவித்துறை: குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் மார்கழி மாத ஆழ்வார் உற்சவம் நடந்தது.வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பரமபத வாசல் வழியாக ஸ்ரீதேவி, பூதேவியர் பெருமாள் வந்தனர். அவர்களை திருப்பாசுரம் பாடி திருமங்கையாழ்வார் நம்மாழ்வார் வரவேற்றனர். அவர்களின் பக்திநெறியை பாராட்டி பெருமாள் ஆசி வழங்கும் காட்சி, ஆழ்வார் உற்சவம் நிகழ்ச்சி நடந்தது. ஆழ்வார்களுக்கு பட்டர் ரங்கநாதர் அபிஷேகம் செய்தார் ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி விஸ்வநாத், ஊழியர்கள் வெங்கடேசன், நாகராஜன் செய்திருந்தனர்.