சென்னை: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, உலகின் மிக நீளமான, திருக்குறள் பதிப்பு நேற்று மெரீனாவில் வெளியிடப்பட்டது. வரும், 16ம் தேதி திருவள்ளுவர் தினம் வருவதையொட்டி, சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள, திருவள்ளுவர் சிலை அருகே, தமிழர் பண்பாட்டு நடுவம் மற்றும் தமிழர் ஆன்றோர் அவை சார்பில், திருக்குறளின், 1,330 குறட்பாக்களையும், 400 அடி நீளமுள்ள பதாகையில் அச்சிட்டு, மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.