பதிவு செய்த நாள்
12
ஜன
2015
11:01
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில், நேற்று காலை நம்மாழ்வார் மோட்சம் நடந்தது. ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாவின், பகல் பத்து உற்சவம் கடந்த மாதம், 22ம் தேதி துவங்கி, 31ம் தேதி வரை நடந்தது. தொடர்ந்து, 1ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதையடுத்து, ராப்பத்து உற்சவம் துவங்கியது. 10வது நாளான நேற்று முன்தினம் உற்சவர் நம்பெருமாள், மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, சொர்க்கவாசல் வழியாக சென்று, சந்திர புஷ்கரணியில் தீர்த்த வாரி காணும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, 6 மணிக்கு நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சி நடந்தது. திருமாமணி மண்டப்பத்தில் இருந்து நேற்று காலை, 9.30 மணிக்கு நம்பெருமாள் புறப்பட்டு, மூலஸ்தானம் சென்றடைந்தார். மூலஸ்தானத்தில் இன்று காலை, 2 மணி வரை, சந்தனு மண்டப்பத்தில் இயற்பா பிரபந்த சேவையும், அதிகாலை, 4 மணி முதல் 5 மணி வரை, சாற்றுமறையும் நடக்கிறது. இத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது.