பதிவு செய்த நாள்
12
ஜன
2015
12:01
கோபி : பாரியூர் கொண்டத்து காளியம்மன், மலர் பல்லக்கில் நேற்று முன்தினம் இரவு ஊர்வலம் வந்தார். கோபி அடுத்த பாரியூரில், பிரசித்த பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. நடப்பாண்டில், குண்டம் தேர்த்திருவிழா, கடந்த, 2014 டிச., 25ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளாக சந்தனக்காப்பு அலங்காரம், ஜன., 5ம் தேதியும், ஜன., 8ம் தேதி திருக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் வரிசையில் நின்று குண்டம் இறங்கினர். 9ம் தேதி திருத்தேர் ஊர்வலம் நடந்தது.அதையடுத்து நேற்று முன்தினம் இரவு, அம்மன் மலர் பல்லக்கில், கோபியில் ஊர்வலமாக வந்தார்.விதவிதமான பூக்கள் மற்றும் மின் விளக்குகளால், உற்சவர் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலம் நடந்தது.பாரியூரில் துவங்கி, பதி, வெள்ளாளபாளையம் பிரிவு, முருகன்புதூர், மேட்டுவலவு வழியாக கோபி டவுனை அடைந்தது.வழிநெடுகிலும் பக்தர்கள் விடிய விடிய காத்திருந்து, ஊர்வலமாக வந்த அம்மனை பக்தி பரவசத்துடன் தரிசித்தனர். அதன்பின், அம்மன் சரவணா தியேட்டர் ரோடு, பெருமாள் கோவில் வீதி, ராஜவீதி, கடைவீதி, தேர்வீதி வழியாக மலர்ப்பல்லக்கு பெருமாள் கோவிலை அடைந்தது. தெப்போற்சவம் வெகு விமர்சையாக நேற்று நடந்தது.