அவலூர்பேட்டை; நொச்சலூர் திரிபுர சுந்தரி சமேத சந்திர மவுலீஸ்வரர் கோவிலில் பஞ்ச மூர்த்தி விழா நடக்கிறது. மேல்மலையனூர் ஒன்றியம் நொச்சலூர் கிராமத்தில் அமைந்துள்ள திரிபுர சுந்தரி சமேத சந்திரமவுலீஸ்வரர், சீதா தேவி சமேத கோதண்டராமர் கோவில்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விழா நடக்கிறது. வரும் 15 ம்தேதி இரவு 7 மணிக்கு பஞ்சமூர்த்தி சுவாமி விதிஉலா நடக்கிறது. விழா குழுவினர்கள், ஹரி ஹர பக்த சபாவினர் மற்றும் கிராம மக்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.