மதுரை : மதுரை திருவேடகத்தில் ஜன., 15ல் சுற்றுலா துறை சார்பில் நடக்கும் பொங்கல் விழாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பங்கேற்கின்றனர். அன்று வெளிநாட்டு பயணிகளுக்கு பாரம்பரிய வரவேற்பு கொடுக்கப்படுகிறது. தொடர்ந்து பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், தமிழர் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. விருந்தும் உண்டு. சுற்றுலாத்துறை அலுவலர் தர்மராஜ் கூறுகையில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஏற்கனவே 50 பேர் முன்பதிவு செய்துள்ளனர். 200 பேர் வரை வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதித்தால், அங்கு வெளிநாட்டு பயணிகளை அழைத்து செல்வது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்.ஜன., 15ல் காலை 9 மணிக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அழைத்து செல்லப்படுவர். திருவேடகத்தில் பகல் 1.30 வரை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மேலும் விபரங்களுக்கு, 0452 - 233 4757 என்ற எண்ணிலும், touristofficemadurai@gmail.com என்ற இணைய முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என்றார்.